Pages

30/08/2011

தமிழக முதல்வரும் காங்கிரஸ் கோஷ்டிகளும்

               ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மூவரின் தூக்கை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.    
                                                                                   
                                                                             

இன்று  சட்டசபையில்   ஒரு  வரலாற்று    தருணத்தை நிகழ்த்திருக்கிறார் நமது மாண்புமிகு முதல் அமைச்சர் ,இவரிடம் இது போன்ற செயலா ? என ஆச்சிரிய பட்டு கொண்டிருக்கிறது தமிழகம் ,இதற்க்கு மக்களின் எழுச்சியன்றி வேறொன்றும் காரணம் இல்லை ,மக்களின் எண்ணமறிந்து செயல் படுபவர் அல்ல நமது முதல்வர் ,அவருக்கு என்ன தோன்றுகிறதோ  அதைதான் செய்வார்

25/08/2011

பம்பரம்

                                                                          

ஏ நீ கடற்க்கரைல போய் சங்கு பாத்திருப்ப நாங்கலாம் கழுத்தறுத்து சங்கு சங்குபாக்குரவைங்க ,எங்க கிட்டேவா ஏ நாங்கலாம்.... ,ஏ சீண்டாத சீண்டுனேன் சீரளிஞ்சுடுவ ,என்று வசனங்களை  வாய்கிழிய பேசிகொண்டிருந்த முற்பட்ட  நாட்கள் வரை நான் பம்பரம்தான் விளையாடிகொண்டிருந்தேன்  கால்சட்டை பையில் எப்போதும்  புடைத்து கொண்டிருக்கும் பம்பரத்துடனான  சாட்டை வால்போல் வெளியில் தொங்கி கொண்டிருக்கும் ,அது ஒரு சீசன் விளையாட்டு ,
       ஒளிஞ்சு புடுச்சு என்று தொடங்கிய எனது வெளிபுற விளையாட்டு கொண்டாட்டம் தொட்டு புடுச்சு , கிட்டி புள்ள , பம்பரம், கோலிகுண்டு ,நாடு , செவன் சாட் , எறிபந்து, கடைசியாக மட்டை பந்து  என நீண்ட பரிணாமத்தை கொண்டது , எங்கள் வீட்டில் பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுள்ள இவை மூன்றும்  விளையாட கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது , மறைந்து மறைந்து விளையாடுவேன் ,ஏனென்றால் அவைகள் சேரிப்பய விளையாட்டாம் , கட்டுப்பாட்டை  கட்டுடைத்தேன் ,சரிவிடு பம்பரம்தானே அதுவும் நம்ம தெருவில்தானே என அப்பா ஆதரவு தெரிவிக்க ,அதன் பிறகு போய் தொல என அப்போதே தண்ணியை தொழித்து விட்டார்கள் , அப்பறம் என்ன வீட்டை விட்டு வெளியில் வந்தால் கோலிகுண்டு அல்லது பம்பரம் என எதாவுது ஒன்றோடுதான் வெளியில் வருவேன் ,ஆனால் பம்பரம்தான் அதிகமாக விளையாடியது ,தெரு முக்கில் , யார் வீட்டு வாசலிலாவுது, சில காலி இடத்தில் ,என தொடர்ந்தோமென்றால் அன்று முழுவதும்  விளையாடுவோம் ,

08/08/2011

பாப்பாத்தி அக்கா                   


அந்த செம்மண் சாலையில் புளிதியை கிளப்பியவாறு அந்த சிற்றுந்து   சென்று கொண்டிருந்தது .அந்த சிற்றுந்துக்குள்  கடைசியில் உள்ளநீளமான  சீட்டிற்கு முன்னால் உள்ள சீட் இல்லாமல் இடம் காலியாக இருந்தது .அந்த இடத்தில் உள்ள  கம்பியில் சாய்ந்தவாறு கண்டெக்டர் டிக்கெட் குடுத்து கொண்டிருந்தார் . சண்முகம் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்திருந்தான் .

" சார் உங்களுக்கு எங்க போகணும் "

" ஒரு சோழவந்தான் " என்றான் சண்முகம்

சன்முகமத்தின் பூர்விகம் சோழவந்தான் தான் . அவன் காலேஜ் படிப்பு முடித்தவுடன் சென்னையில் வேலைகிடைத்தது . பெற்றோர்களையும் தன்னுடன் அழைத்துகொண்டான் .முதலில் அவன் அப்பா மறுத்தாலும் பின்பு பாரலிசிஸ் நோயால் சென்னைக்கே வரவேண்டியதாகி விட்டது . பிறகு அவரும் இறந்து போய் " துக்க வீட்டுல உடனே நல்ல காரியம் நடக்கனும்டா, அப்பதாண்டா  உங்க அப்பா ஆத்மா சாந்தி அடையும் என்று ஆறாவது மாதம் கழித்து தூரத்து சொந்தத்தில் உள்ள சுந்தரேஸ்வரியை அவனுக்கு கல்யாணம் செய்துவைத்து விட்டாள் .
அப்பொழுது அவனுக்கு வயது 25  . ஆயிற்று அந்த தாயும் தூக்கத்திலே போய் சேர்ந்து விட்டாள் .கிராமத்தில் சொந்தம் சொல்லி கொள்ள  என்று ஒரே ஒரு வீடு ஒன்று இருந்தது .இனிமேல் யாரு கிராமத்திற்கு போக போகிறோம் என்று அந்த வீட்டை  விற்று விடுவோம் முடிவிற்கு வந்த  அவன் பால்ய நண்பன் மாரிமுத்து விடம் சொல்லி வைத்திருந்தான் . நீ நேர்ல வந்தா  வீட்டை பேசி முடிச்சிருலாம் உடனே கெளம்பி வான்னு நேற்றிரவு மாரிமுத்து போனில் கூற .அவனும் இரவோடு இரவாக கிளம்பி விட்டான் மதுரைக்கு

" ஏய் பாப்பாத்தி உனக்கு சேர்த்து நானே டிக்கெட் எடுத்துட்டேன் நீ எடுத்துடாத " என்று  பேருந்தினுள் ஒரு குரல் கேட்டது. பாப்பாத்தி இந்த வார்த்தை அவன் நெஞ்சில் முள்ளாய் குத்தியது
பாப்பாத்தி அக்கா நீ எப்படி இருக்கக்கா, பாப்பாத்தி அக்கா ஆஆ
 
                               **********************************************
 

நா.மணிவண்ணன் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger