Pages

30/08/2011

தமிழக முதல்வரும் காங்கிரஸ் கோஷ்டிகளும்

               ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மூவரின் தூக்கை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.    
                                                                                   
                                                                             

இன்று  சட்டசபையில்   ஒரு  வரலாற்று    தருணத்தை நிகழ்த்திருக்கிறார் நமது மாண்புமிகு முதல் அமைச்சர் ,இவரிடம் இது போன்ற செயலா ? என ஆச்சிரிய பட்டு கொண்டிருக்கிறது தமிழகம் ,இதற்க்கு மக்களின் எழுச்சியன்றி வேறொன்றும் காரணம் இல்லை ,மக்களின் எண்ணமறிந்து செயல் படுபவர் அல்ல நமது முதல்வர் ,அவருக்கு என்ன தோன்றுகிறதோ  அதைதான் செய்வார்
,நேற்று அதிகாரம் எனக்கு இல்லை என்று கூறியவர்இன்று ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிக்கிறார் என்றால்  அது உண்மைலே பாராட்டுக்குரிய விஷயம் ,இதை கலைஞர் முதல்வராக இருந்து இது போல் ஒரு நிகழ்வு நடந்திருந்தால் ,உடனடியாக ஒரு பாராட்டு விழா ஏற்பாடாகிருக்கும் ,அந்த மட்டில் தமிழகம் தப்பித்தது ,ரஜினி ,கமல் ,முக்கிய நடிகர் நடிகைகள் தப்பித்தனர் ,அதை விட முக்கியமாக நாம் தப்பித்தோம் 

                இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்தவர்களுக்கு கொஞ்சம் கூட கருணை காட்ட கூடாதா ?அப்படி காட்டினால் அவர்கள் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பார்கள் என்று காங்கிரஸ் கோஷ்டியினர் கூறுகிறார்கள் ,இவர்களுக்கான பாடத்தை சட்ட சபை தேர்தலில் அளித்தும் புத்தி வரவில்லையே ,தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களான ,தொங்கபாலுவும், வெலோங்கோவனும் ,தமிழக முதல்வருக்கு ஏனிந்த தடுமாற்றம் என்கிறார்கள் ,தடுமாற்றம் அவர்களுக்கு அல்ல உங்களுக்குத்தான் ,அவர் இப்போதுதான் எந்த தடுமாற்றமில்லாமல் சரியான காரியத்தை செய்திருக்கிறார்  .ராஜீவ் கொலையில் விசாரிக்க படாத பக்கங்கள் உள்ள நிலையிலும் ,விசாரிக்க படவேண்டியவர்கள் வெளியில் உள்ள நிலையிலும் வேக வேகமாக இந்த மூன்று கொலையை அரங்கேற்ற துடிப்பது எந்தவிதத்தில் நியாயம் ,உள்ளாட்சி தேர்தல் வரட்டும் முழுமையாக  கா...  அடித்து விடுவோம்

 சகோதிரி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையட்டும்
                                                          

8 comments:

Prabu Krishna (பலே பிரபு) said...

ஒரு நல்ல தீர்மானம் போட்டு விட்டாரே அம்மா. அதுவரை ஓகே. இன்னும் முயற்சி செய்வோம் முழுத்தடைக்கு.

R.Elan. said...

உள்ளாட்சி தேர்தலில் வெரும் கையை காங்கிரசு நக்க போவது உறுதி.

நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

வணக்கம் சகோதரா,
ஜெ அவர்களின் செய்தி மனதிற்கு நிம்மதியைத் தருகின்றது,

செங்கொடியின் முடிவு தவறானது, ஆனாலும் அவரது கனவு நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.

இரவு வானம் said...

முழுவதுமாக தூக்கு தண்டனையிலிருந்து விடுபடுவார்கள் என நம்புவோம், தமிழக முதல்வருக்கு நன்றிகள்.

அரசன் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி

அருள் said...

தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_5747.html

J.P Josephine Baba said...

http://josephinetalks.blogspot.com/2011/09/blog-post.html வாழ்த்துக்கள் நண்பா.

 

நா.மணிவண்ணன் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger