ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மூவரின் தூக்கை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று சட்டசபையில் ஒரு வரலாற்று தருணத்தை நிகழ்த்திருக்கிறார் நமது மாண்புமிகு முதல் அமைச்சர் ,இவரிடம் இது போன்ற செயலா ? என ஆச்சிரிய பட்டு கொண்டிருக்கிறது தமிழகம் ,இதற்க்கு மக்களின் எழுச்சியன்றி வேறொன்றும் காரணம் இல்லை ,மக்களின் எண்ணமறிந்து செயல் படுபவர் அல்ல நமது முதல்வர் ,அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதைதான் செய்வார்


