Pages

25/08/2011

பம்பரம்

                                                                          

ஏ நீ கடற்க்கரைல போய் சங்கு பாத்திருப்ப நாங்கலாம் கழுத்தறுத்து சங்கு சங்குபாக்குரவைங்க ,எங்க கிட்டேவா ஏ நாங்கலாம்.... ,ஏ சீண்டாத சீண்டுனேன் சீரளிஞ்சுடுவ ,என்று வசனங்களை  வாய்கிழிய பேசிகொண்டிருந்த முற்பட்ட  நாட்கள் வரை நான் பம்பரம்தான் விளையாடிகொண்டிருந்தேன்  கால்சட்டை பையில் எப்போதும்  புடைத்து கொண்டிருக்கும் பம்பரத்துடனான  சாட்டை வால்போல் வெளியில் தொங்கி கொண்டிருக்கும் ,அது ஒரு சீசன் விளையாட்டு ,
       ஒளிஞ்சு புடுச்சு என்று தொடங்கிய எனது வெளிபுற விளையாட்டு கொண்டாட்டம் தொட்டு புடுச்சு , கிட்டி புள்ள , பம்பரம், கோலிகுண்டு ,நாடு , செவன் சாட் , எறிபந்து, கடைசியாக மட்டை பந்து  என நீண்ட பரிணாமத்தை கொண்டது , எங்கள் வீட்டில் பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுள்ள இவை மூன்றும்  விளையாட கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது , மறைந்து மறைந்து விளையாடுவேன் ,ஏனென்றால் அவைகள் சேரிப்பய விளையாட்டாம் , கட்டுப்பாட்டை  கட்டுடைத்தேன் ,சரிவிடு பம்பரம்தானே அதுவும் நம்ம தெருவில்தானே என அப்பா ஆதரவு தெரிவிக்க ,அதன் பிறகு போய் தொல என அப்போதே தண்ணியை தொழித்து விட்டார்கள் , அப்பறம் என்ன வீட்டை விட்டு வெளியில் வந்தால் கோலிகுண்டு அல்லது பம்பரம் என எதாவுது ஒன்றோடுதான் வெளியில் வருவேன் ,ஆனால் பம்பரம்தான் அதிகமாக விளையாடியது ,தெரு முக்கில் , யார் வீட்டு வாசலிலாவுது, சில காலி இடத்தில் ,என தொடர்ந்தோமென்றால் அன்று முழுவதும்  விளையாடுவோம் ,

  பம்பரம் இரண்டு வகை உண்டு ,ஒன்று ஈய ஆணி பம்பரம், இரும்பாணி பம்பரம்

                                                 பம்பர விளையாட்டில் இரண்டு வகை உண்டு ஒன்று வட்ட பார் , இன்னொன்று  ஆக்கர் பார் , இதில் வட்டபாரில் ஒன்று மிக பெரிய பிரச்சனை இருக்காது ஆனால் ஆக்கர்பாரில் சிக்குனவன் கட்டையை  உடைக்காமல் விடமாட்டோம் ,வட்டபார் என்பது முதலில் வட்டம் ஒன்று போட்டுகொள்வோம் ,எத்தனை பேர் வேண்டுமென்றாலும் விளையாடலாம் ,ஒன்னு ரெண்டு மூணு எண்ணி முடித்தவுடன் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பம்பரத்தை சுழற்றுவோம் வேகமாக சுழலும் பம்பரத்தை சுற்றி சாட்டையை ஒரு முறையோ அல்லது இரு முறையோ சுற்ற வேண்டும் ,அப்படியே விசுக் என்று தூக்கி பிடிக்க வேண்டும் ,அப்போது அங்கோசு என்றோ அல்லது அபிட் என்றோ கூறவேண்டும் . இதில் யார் கடைசியாக பம்பரகட்டையை  தூக்கி  பிடிக்கிறார்களோ அவர்கள் பம்பரம் வட்டத்துக்கள் வைத்து விடுவோம் ,பிறகு விளையாட்டு தொடங்கும் ஒவ்வொரும் முறையும் பம்பரம் வட்டத்திற்குள் குத்தி வெளியில் வரவேண்டும் ,வட்டத்திற்குள் வெளியில் குத்தினால் அவர்கள் பம்பரமும் உள்ளே வைக்க படும் ,அதே போல் பம்பரம்வட்டத்திற்குள்குத்தி அங்கிருந்து வெளியில் வந்து விடவேண்டும் இல்லையென்றால் அப்படியே அமுக்கி விடுவார்கள் ,அதே வட்டத்திற்குள் உள்ள கட்டையை வெளியில் எடுக்கவும் செய்யலாம்  ,ஏ என் கட்டையை வெளியில் எடுத்து குடுடா என நண்பன் கேப்பான் , நன்பானாக இருந்தாலும் விளையாட்டு என்று வந்துவிட்டால் எதிரியே , அவன் பே என்று கைகட்டி நின்று பார்க்க ,வட்டத்திற்குள் வைத்து ஒரு ஆக்கராவுது குத்தாமல் வெளியில் தள்ளமாட்டோம் , வட்டத்திற்குள் இருக்கும் மொத்த கட்டையும் வெளியில் வந்துவிட்டால் அடுத்த நொடியே பம்பரத்தை வேகமாக சுற்றி அங்கோசு எடுத்துவிட வேண்டும் ,அதில் யார் அங்கோசை கடைசியில் எடுக்கிறார்களோ அவர்கள் கட்டை வட்டத்திற்குள் வைக்கப்படும் ,மீண்டும் விளையாட்டு தொடங்கும்

                              ஆக்கர் பார் என்பது இரண்டு கோடு கிழித்து கொள்வோம் .அந்த இரண்டு கோடுக்கும் இடைப்பட்ட தூரம் 30  முதல் 50 அடி வரை இருக்கும் ,இங்கும் அதே போல் எல்லோரும் அங்கோசு எடுக்க வேண்டும் ,யார் கடைசியில் பம்பரத்தை எடுக்கிறார்களோ  அவர்கள் பம்பரத்தை முதல் கோட்டிற்கு அருகே ஒரு இன்ட்டூ  வரைந்து அதில் வைத்து விடுவோம் ,இந்த கோடில் இருந்து அந்த கோடு வரை நம்  பம்பரக்கட்டையை வைத்து அடித்தே செல்ல வேண்டும் , ஒவ்வொரு முறையும் நம் பம்பரத்தால்  அந்த பம்பரத்தை அடிக்க வேண்டும் ,முடியாவிட்டால் கையில் எடுத்தாவது  அடிக்க வேண்டும் முடிவில் எத்தனை பேர் விளையாடுகிறோமோ அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த கோடு வரை அடித்து செல்ல பட்ட கட்டையை ஆக்கர் அடிக்கலாம் ,ஆக்கரென்பது நம் பம்பர ஆணியை அந்த பம்பரம் தலையில் வைத்து  குத்துவது ,அதுபோல் மூன்று முறை குத்துவோம் ,இதில் யார் கடைசியாக அந்த பம்பரக்கட்டையை அடித்து தள்ளினார்களோ அவர்கள் அந்த பம்பர கட்டை உடைக்கும் தகுதி பெற்றவராகிறார் ,பாரபட்சம் எல்லாம் கிடையாது கண்டிப்பாக உடைத்தே தீருவோம் ,பல முறை நானும் உடைத்திருக்கிறேன் ,என் பாமபரகட்டையும் உடைக்கபட்டிருக்கிறது , இன்று வழக்கொழிந்து போன விளையாட்டில் பம்பரமும் ஒன்று ,ஆனால் நேற்று ஒருவர் பம்பரம் விளையாடியதை பார்த்தேன் ,வேறு யாரு நம்ம கேப்டன் தான் ,சன் தொலைகாட்சியில் பகலில் சின்ன கவுண்டர் படம் பார்த்தேன், புரட்சி கலைஞர் அதிலும் ஒரு புரட்சி செய்தார் ,கருப்பு எம்.ஜி.ஆர் பம்பரம் விட்ட இடம் வெள்ளையாக இருந்தது

6 comments:

மதுரை சரவணன் said...

pambaram nallaa suththi yirukkungka..vaalththukkal

மதுரை சரவணன் said...

pambaram nallaa suththi yirukkungka..vaalththukkal

Unknown said...

எல்லாரும் மறந்திருந்த பம்பரம் விளையாட்டை நினைவுபடித்தியதற்கு நன்றி, புரட்சிகலைஞர்னு ஏன் பேர் வந்ததுன்னு ரொம்ப நாள் டவுட்டு இப்ப தீர்ந்து போச்சு மணி............:-)

Unknown said...

கேள்விப்பட்டிருக்கேன் மணி! ஆனா விளையாடியதில்லை...ஏன் நேர்ல பார்த்ததேயில்ல...அவ்வவ்! சினிமாலதான் பார்த்தது! ஹி ஹி :-)

Sivakumar said...

அசத்தல் மணி...உங்கள் எழுத்துக்கு ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். எந்தவித வார்த்தை ஜாலங்களும் இன்றி எழுதுவதுதான் உங்கள் பதிவு சிறப்பாக இருப்பதற்கு முக்கிய காரணம். தொடர்ந்து பம்பரம் விடுங்க. வாழ்த்துகள்!!

N.H. Narasimma Prasad said...

பழைய விளையாட்டான பம்பரத்தை நினைவுபடுத்தியதற்கு நன்றி. எனக்கு பம்பரம் விடத் தெரியும், ஆனால் தெருவில் இறங்கி சிறுவர்களோடு விளையாடியதில்லை.

 

நா.மணிவண்ணன் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger